Showing posts with label புகையிரதம். Show all posts
Showing posts with label புகையிரதம். Show all posts

Wednesday, December 2, 2015

புகையிரதப் பாதைகளில் ஆமைகளுக்கு கடவைகள்

தெற்காசிய நாடுகளில் மனிதர்களின் பாதுகாப்புக்கு கூட முறையாக அமைக்கப் பெற்ற புகையிரத பாதுகாப்பு கடவைகள் இல்லாத நிலையில் ஜப்பானில் நடந்த சம்பவம் கீழே.
ஜப்பானில் சிலவேளைகளில் ரயில்கள் தாமதமாகும். இதை கண்டறிய முற்பட்ட போது தண்டவாளங்கள் திசைமாற்றும் பகுதியில் இறந்த ஆமைகளைக் காணக் கூடியதாக இருந்தது, எனவே ஆமைகள் சிக்கிக் கொள்வதால் உடனடியாக திசை மாற்ற முடிவதில்லை.





தண்டவாளங்கள் திசைமாற்றும் பகுதியில் அகப்பட்டுள்ள ஆமை.










ஆகையால் ஆமைகளின் இறப்புகளை கட்டுப்படுத்தவும் புகையிரத தாமதங்களை தவிர்க்கவும்  தண்டவாளப் பகுதியில் குறித்த இடைவெளிகளில் ஆமைகளுக்கான கால்வாய்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.





தண்டவாளப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கால்வாயினூடு ஆமைகள் செல்லுகின்றன.