Showing posts with label தமிழ்த் திரை. Show all posts
Showing posts with label தமிழ்த் திரை. Show all posts

Saturday, September 2, 2017

புரியாத புதிர்

நேற்று பார்த்த திரைப்படம் விஜய் சேதுபதியின் நடிப்பில் வந்த மற்றொரு புதையல் 'புரியாத புதிர்'. படத்தின் முன்னோட்டத்தை (Trailer) பார்த்தால் அது ஒரு பேய் படமா என தோன்றவைத்தது. ஆனால் அதை தாண்டி ஒரு சிறந்த கதைக்கருவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இயக்குனர் கையாண்டிருக்கிறார்.




அது எதுவெனில் 'கையடக்கத் தொலைபேசியிலுள்ள ஒளி-ஒலி சாதனம்' (Phone-Camera). பொதுவாக தமிழ் திரை வரலாற்றில் ஒரு சில படங்களே காலம் தாழ்த்தி வெளிவந்து வெற்றிபெற்றன. உதாரணமாக அஜீத் நடித்த 'வரலாறு' மற்றும் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு'. ஆனால்  'புரியாத புதிர்' இரண்டு வருடம் கழித்து மிகச் சரியான நேரத்தில் வெளிவந்துள்ளது. ஏனெனில்  தற்போதுதான் சமூக வலைத்தள பாவனையாளர்களை கொலைப்பயத்துக்குளாக்கிய நீலத்திமிங்கிலம் (Blue Whale) என்ற விளையாட்டின் விபரீதம் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு தெரியவந்துள்ள அதே வேளையில்,  இயக்குனர் கையடக்கத் தொலைபேசியிலுள்ள ஒளி-ஒலி சாதனத்தால் ஏற்பட்ட விளைவை மிகச் சிறப்பாக பார்வையாளர்களை திரைக்கதையுடன் இழுத்துச் சென்றுள்ளார். நிச்சயமாக இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்து இக்கதையின் கருவை கொண்டு பல சிந்தனைகளுடன் அனைவரும் செல்வது உறுதியே.

அண்மையில் கூட அஜீத்தின் விவேகம் திரைப்படம் பல தொழில்நுட்பவியல் விடயங்களை (Hologram Imaging, Mobile Signal Jamming,Morse Code, Reverse Hacking & Tracking with Pacemaker) எமக்கு திரை போட்டுக்காட்டினாலும் பலரிடம் அது ஒட்டவில்லை, ஏனெனில் பார்வையாளர்களுக்கு பரிச்சயம் குறைந்தவை என்பதாலும் பார்வையாளர்களை கதை தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை என்றால் சரி போல் உள்ளது.

மொத்தத்தில் 'புரியாத புதிர்' புரிதல்கள் வேண்டி

Thursday, January 12, 2017

மிகப் பெரிய சாதனைகளையும் ஒரு சிறு புன்சிரிப்புடன் தாண்டிச் செல்லும் இசைப்புயல்

1994 ஆம் ஆண்டுகளில் சைக்கிளில் தைனமோ பூட்டி-சுத்தி முக்காலா முக்காப்பிலா மற்றும் ஊர்வசி பாடல்களை திரும்பத் திரும்பத் பலதடவை கேட்டிருப்போம். ஆனால் அப்போது யார் இசை அமைப்பாளர், பாடியவர்கள், கவிஞர், ஒலி-பொறியியலாளர் (Sound Engineer)  என்றெல்லாம் சிந்தித்தது கிடையாது. ஆனாலும் அந்த பாடல் மயக்கம் 23 வருடங்கள் கழிந்தும் எம்மை கட்டிப்போட்டுள்ளது    என்றால் மிகையல்ல. அதற்கு நல்ல உதாரணம் சிலவேளைகளில் வீதியில் செல்லும்போது, அப்பாடல்கள் சில கடைகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். பின்னர் நாம் வீடு வந்த பின்னர் அப்பாடலை மீண்டும் கேட்டிருப்போம். 'ரோஜா' முதல் இறுதியாக வந்த 'அச்சம் என்பது மடைமையடா' வரை எல்லாமே கேக்க கேக்க பிடிக்கும் வகையறாக்கள். இசையை மாத்திரமல்லாது தமிழ் மொழியையும் உலகிற்கு எடுத்துச் சென்றவர் ரஹ்மான்.

அநேகமான இசை மேதைகளை பார்த்தால் அவர்களிடத்தில் ஆன்மீக சக்தி (Spiritual Power) ஒன்று அவர்களிடத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும், உதாரணமாக மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ரஹ்மான். இளையராஜா ஒரு இசை திமிர் பிடித்த மனிதர். சில இடங்களில் தன்னை பெருமை பேசும் விதமாக இசை செய்வார். ஆனால் அவர் அவ்வாறு செய்வதில் தவறு இல்லை. ஏனெனில் அவர் 100 வீதம் தனது சொந்த இசை அறிவையே பயன்படுத்தி இருப்பார் தனது பாடல்களில். அவரது பாடல்கள் எவ்வாறு எமது வாழ்க்கையோடு இன்றியமையாதது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் சொன்னால், "இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளில் சில பாடல்கள் ஒலிக்கையில் ரசிகர்களின் கண்ணிலிருந்து கண்ணீர் ஒழுகும்". இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை எத்தனை இசை மேதாவிகள் தமிழ் திரைஉலகத்துக்கு வந்தாலும் ராஜா என்றென்றும் ராஜாதான், மாற்றுக் கருத்தில்லை.
பணிவு என்ற சொல்லை நான் அறிவேன் ஆனால் அதை நேரடியாக பார்த்து முதலில் வியர்ந்தது என்னுடன் வேலை செய்த ஒரு மூத்த கணிய அளவியலாளர். அவர் தனது துறையில் ஏறத்தாழ 30 வருடத்திற்கும் அதிக அனுபவம் உடையவர் ஆனாலும் அனைவரையும் மதிப்பது மட்டுமல்லாது தனது அனுபவத்தை விட வயது குறைந்த என்னைப் போன்றவர்களுடனும் எந்தவிதமான சஞ்சலங்களும் (Ego Problem)  இன்றி முழு ஈடுபாட்டுடன் வேலை செய்வார். திரை உலகில் உள்ளவர்களில் பணிவின் சிகரம் என்றால் ரஹ்மான்தான் இருக்க முடியும் என்று நம்புகின்றேன். திரை உலகின் உச்ச வெற்றியாக கருதப்படும் ஆஸ்கார் இரண்டை ஒருவாயில் பெற்றாலும் திருவாய் மறந்து கூட தன்னைப் பற்றி பெருமை கூறியது கிடையாது.  சாதனைகளின் சொந்தக் காரன் சாதாரண மனிதனாக வாழ்கின்றமை வியப்புக்குரியதே. அநேகர்அவனை” விழிப்பது ஒரு கலாச்சாரத்துக்கே, ஆனால் ரஹ்மான் போன்ற ஒரு சிலர் தான் சொல்லும் சொல்லுக்கேற்ப "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று வாழ்கின்றனர். தமிழைப் பற்றி தப்பட்டை அடிப்பவர்களுக்கு மத்தியில் ஒரு ஓடும் தூய நதியாக தனது வெற்றியை தமிழில் பதிவு செய்தார் மேலை நாட்டவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் மத்தியில்.

என்னதான் மிகப் பெரிய சாதனைகளையும் ஒரு சிறு புன்சிரிப்புடன் தாண்டிச் செல்லும் இசைப்புயல். அத்துடன் எனக்கு அடிக்கடி தோன்றுகின்ற விடயம் யாதெனில் ரஹ்மான் போன்ற சாதனையாளர்கள் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற வேளையில் இவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? எதைப் பற்றி சிந்திப்பார்கள்?...

ரஹ்மானுக்கு அடியேனின் 50 ஆவது பிறந்த தின (06 தை) (பிந்திய) வாழ்த்துக்கள்.


இக்கட்டுரையை எழுதி முடிக்கையில் இணையத்தில் கிடைத்த செய்தி ஒன்று, இவர் சோமாலியாவில் 3000 வருடங்கள் பழமை வாய்ந்த சில இசைக்கருவிகளை வாங்கியதாகவும் அவற்றின் விலைகள் மிகக் குறைவாக இருந்தது. காரணம் என்னவென்ற போது அங்கே தலைவிரித்தாடும் வறுமை என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனாலும் ரஹ்மான் மிகப் பெரிய தொகையை அந்நாட்டு அரசே வியக்கும் வகையில் கொடுத்து உதவியுள்ளதாக.

இசைப்புயலின் சில ஞாபகங்கள் 

Friday, December 9, 2011

Why This Kolaveri; Lyrics

Hello Boys.. I am Singing Song..
Soup Song.. Flop Song..


Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Rhythm Correct..
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Maintain This..
Why This Kolaveri? Dee..

Distance'la Moon'nu Moon'nu
Moon'nu Color'ru White'tu
White'tu Background Night'tu Night'tu
Night'tu Color'ru Black'ku
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?

White'tu Skin'nu Girl'lu Girl'lu
Girl'lu Heart'tu Black'ku
Eyes'su Eyes'su Meet'tu Meet'tu
My Future Dark'ku..
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?
Why This Kolaveri Kolaveri Kolaveri Dee?

Mama, Notes Eduthuko..
Apdiye Kaila Šnacks Èduthukø..
Papapa Papapapa Papapa Pa Pa..
Šeriya Vaasi..
Šuper Mama Ready.. Ready 1 2 3 4..
What A Change Over Mama..
Ok Mama.. Nøw Tune Change'ju..

Kaila Glass'su.. Only Ènglish'sa..
Hand'la Glass'su
Glass'la Šcøtch'chu
Èyes'su Full'la Tear'ru
Èmpty Life'fu, Girl Cøme'mu
Life'fu Reverse'su Gear'ru
Løve'vu Løve'vu Oh My Løve'vu
Yøu Šhøw Tø Me Bøw'vu
Cøw'vu Cøw'vu Høly Cøw'vu
I Want Yøu Here Nøw'vu
Gød I am Dying Nøw'vu
Šhe Is Happy Høw'vu?
This Šøng'gu Før Šøup Bøys'su
We Døn't Have Chøice'su

Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee
Why This Kølaveri Kølaveri Kølaveri Dee

Fløp Šøng..

==================

Nø Tamil.. Only Ènglish'su…

Saturday, October 15, 2011

7 ஆம் அறிவு பட பாடல் வரிகள்

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாலே..
புல்லாங்குழல கையில் தந்தாலே..
என் மூச்சுக்காத்த வாங்கி போனாலே..
பொம்பளைய நம்பி.. கெட்டுபோனவங்க ரொம்ப
அந்த வரிசையில் நானும்..
இப்ப கடைசியில் நின்னேன்..
முத்தெடுக்க போனால்..
உன் மூச்சடங்கும் தன்னால்..
காதல் முத்தெடுத்த பின்னல்
மனம் பித்தமாகும் பெண்ணால்..
அவ கையவிட்டுதான் போயாச்சு..
கண்ணு ரெண்டுமே பொய்யாச்சு..
காதல் என்பது வீண் பேச்சு..
மனம் உன்னாலே புண்ணாய் போச்சு..
காதல் பாதை கல்லு முல்லுடா..
அதை கடந்துபோன ஆளே இல்லடா..
காதல் ஒரு போதை மாதிரி
அதை போட்டுகிட்டா மூங்கில் யாத்திரை..

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்ம

ஓட்ட போட்ட மூங்கில், அது பாட்டு பாட கூடும்..
நெஞ்சில் ஓட்ட போட்ட பின்னும், மனம் உன்ன பத்தி பாடும்.
வந்து போனதாறு? ஒரு நந்தவன தேறு..
நம்பி நொந்து போனேன் பாரு. அவ பூ இல்ல நாரு.
என்ன திட்டம் போட்டு நீ திருடாதே..
எட்ட நின்னு நீ வருடாதே,
கட்டெறும்பு போல் நெருடாதே..
மனம் தாங்காதே தாங்காதே…
வானவில்லின் கோலம் நீயம்மா,
என் வானம் தாண்டி போனதெங்கம்மா..
காதல் இல்லா ஊரு எங்கடா
என்ன கண்ண கட்டி கூட்டி போங்கடா..

யம்மா யம்மா காதல் பொன்னம்மா
நீ என்ன விட்டு போனதென்னம்மா
நெஞ்சுக்குள்ளே காயம் ஆச்சம்மா
என் பட்டாம் பூச்சி சாயம் போச்சம்மா
அடி ஆணோட காதல் கை ரேக போல
பெண்ணோட காதல் கை குட்ட போல..
கனவுக்குள்ள அவல வெச்சேனே
என் கண்ண ரெண்ட திருடி போனாலே..
புல்லாங்குழல கையில் தந்தாலே..
என் மூச்சுக்காத்த வாங்கி போனாலே..