Tuesday, January 12, 2010

பொங்கல் எங்கள் பொங்கல்!!

பொங்கல் எங்கள் பொங்கல் தமிழ் தைத்திருநாள் பொங்கல் - இன்றுமங்கலங்கள் அள்ளித் தரும் பொங்கல்


இது பொங்கலோ பொங்கல்
தமிழ் மணக்கும் பொங்கல்








புத்தம்புது நெல்லெடுத்துப் பச்சரிசி பிடைத்தெடுத்து
மண்பானை அடுப்பேற்றும் பொங்கல்
சர்க்கரையும் நெய்யுமிட்டு வீட்டுமுற்றக் கோலத்திலே
ஆதவனை நமஸ்கரிக்கும் பொங்கல்


இது பொங்கலோ பொங்கல்
நெய் மணக்கும் பொங்கல்
விடியலுக்காய்ப் பொங்கல்
எம்தமிழர் வீரமதன் பொங்கல்

No comments:

Post a Comment