Saturday, January 16, 2010

சிவகுமார் பாராட்டு சொக்கிப்போன பார்த்திபன்

மேலும் ஒரு ‘ஆயிரத்தில் ஒருவன்’ நியூஸ்... பொத்தி பொத்தி வைத்திருந்தார்கள் பார்த்திபன் கேரக்டரை. ட்ரெய்லரில் கூட இவரது கால்களை காட்டுவார்களே தவிர, கெட்டப்பை காட்டவில்லை. காரணம், இந்த கேரக்டர் மீது ஒரு பில்டப் தொடருட்டுமே என்றுதான்.

நினைத்த மாதிரியே இவரது கேரக்டரை பிரமாதம் என்கிறது சினிமா வட்டாரம். படம் பார்த்துவிட்டு வெளியே வருகிற திரையுலக நண்பர்கள் பார்த்திபனுக்கு போன் அடித்து அசத்திட்டீங்க என்கிறார்களாம். இத்தனைக்கும் படத்தின் கதையை பார்த்திபனுக்கே சொல்லவில்லை செல்வராகவன். "இங்கே நில்லுங்க. அங்கே பாருங்க. இந்த டயலாக்கை இப்படி பேசுங்க" என்றுதான் ட்யூஷன் எடுத்தாராம். அவர் சொன்னதை செய்ததற்கே இத்தனை பாராட்டுகள். இன்னும் சுதந்திரம் கொடுத்திருந்தால் எப்படியிருந்திருக்கும்? இது பார்த்திபனின் புலம்பலாகவும் இருக்கக்கூடும். போகட்டும்...

பார்த்திபனை பாராட்டிய இன்னொரு பெரிய தலை, நடிகர் சிவகுமார். "ஒரு ராஜா எப்படியிருப்பார்னு காட்டிட்டே" என்றாராம். "தமிழ்சினிமா இதுவரை காட்டிய ராஜாக்கள் எப்படியோ? ஆனால் நீ போட்டதுதான் ஒரிஜனல் ராஜா வேஷம்" என்பது அவரது பாராட்டாம். ரொம்பவே சொக்கிப் போயிருக்கிறார் பார்த்திபன்.

No comments:

Post a Comment