என் கண்களில் அழுது அழுது கண்ணீரும் வற்றிப் போயிற்று.....
ஆண்டாண்டு காலமதாய்
இப்பூமியிலே அவதரிக்கும்
மானிடவர்க்கம்தான்
நான்!
பிறந்தது முதல்
இன்று வரை
கிடைத்த பட்டம்
"அகதி''
என்றோ ஒரு நாள்
விடிவு வரும்
என்ற நம்பிக்கையில்என்
உடம்பில்உயிர் மட்டும்
ஊசலாடுகிறது
"அகதி'' வாழ்கையிலே
குடிக்க நீரில்லை என்று
கண்ணீர் கூட விட முடியவில்லை
ஏனெனில்! என் கண்களில்
அழுது அழுது
கண்ணீரும் வற்றிப் போயிற்று.....-
மு.ஆ. சுமன் வல்வை சிதம்பரக் கல்லூரி
நன்றி:www.uthayan.com
No comments:
Post a Comment