நிகழ்காலத்தில் தொடங்கி பல நூற்றாண்டுகள் பின்னோக்கி பயணிப்பதாக கதை அமைக்கப்பட்டுள்ளது. கார்த்தி ஹீரோ. ஆண்ட்ரியா, ரீமா சென் ஹீரோயின்கள். பார்த்திபன் அரசராக வித்தியாச வேடமேற்றிருக்கிறார்.
படத்தின் பெரும் பகுதி அடர்ந்த காட்டில் படமாக்கப்பட்டுள்ளது. முன்னணி நடிகர்களுடன் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட துணை நடிகர்களும் இதில் நடித்துள்ளனர்.
நீண்ட பாலைவனங்கள், ரோம பேரரசை நினைவுப்படுத்தும் பழங்கால போர் முறைகள், காட்டாறுகள், பழங்கால நினைவுச் சின்னங்கள் என கதை பயணிக்கும் ஏரியா ரொம்பவே பெரிது. தமிழ் சினிமா இதுவரை தொட்டுப் பார்த்திராத பகுதிகள் என்று தைரியமாகச் சொல்லலாம்.
நூற்றாண்டு பழமையான இசைக்காக மிகுந்த ஹோம் வொர்க் செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஆக்சன் காட்சிகளை அமைத்திருப்பவர் ராம்போ ராஜ்குமார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். செல்வராகவன் படத்துக்கு அவர் பாடல் எழுதியிருப்பது இதுவே முதல்முறை.
பொங்கலுக்கு வெளியாகும் இந்தப் படம் எல்லா வகையிலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. சென்சார் இந்தப் படத்துக்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளது.
No comments:
Post a Comment