நேற்று பார்த்த திரைப்படம் விஜய் சேதுபதியின் நடிப்பில் வந்த மற்றொரு புதையல் 'புரியாத புதிர்'. படத்தின் முன்னோட்டத்தை (Trailer) பார்த்தால் அது ஒரு பேய் படமா என தோன்றவைத்தது. ஆனால் அதை தாண்டி ஒரு சிறந்த கதைக்கருவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே இயக்குனர் கையாண்டிருக்கிறார்.
அது எதுவெனில் 'கையடக்கத் தொலைபேசியிலுள்ள ஒளி-ஒலி சாதனம்' (Phone-Camera). பொதுவாக தமிழ் திரை வரலாற்றில் ஒரு சில படங்களே காலம் தாழ்த்தி வெளிவந்து வெற்றிபெற்றன. உதாரணமாக அஜீத் நடித்த 'வரலாறு' மற்றும் சிம்பு நடித்த 'இது நம்ம ஆளு'. ஆனால் 'புரியாத புதிர்' இரண்டு வருடம் கழித்து மிகச் சரியான நேரத்தில் வெளிவந்துள்ளது. ஏனெனில் தற்போதுதான் சமூக வலைத்தள பாவனையாளர்களை கொலைப்பயத்துக்குளாக்கிய நீலத்திமிங்கிலம் (Blue Whale) என்ற விளையாட்டின் விபரீதம் ஆசிய நாடுகளை சேர்ந்தவர்களுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு தெரியவந்துள்ள அதே வேளையில், இயக்குனர் கையடக்கத் தொலைபேசியிலுள்ள ஒளி-ஒலி சாதனத்தால் ஏற்பட்ட விளைவை மிகச் சிறப்பாக பார்வையாளர்களை திரைக்கதையுடன் இழுத்துச் சென்றுள்ளார். நிச்சயமாக இத்திரைப்படத்தை பார்த்துவிட்டு வெளியில் வந்து இக்கதையின் கருவை கொண்டு பல சிந்தனைகளுடன் அனைவரும் செல்வது உறுதியே.
அண்மையில் கூட அஜீத்தின் விவேகம் திரைப்படம் பல தொழில்நுட்பவியல் விடயங்களை (Hologram Imaging, Mobile Signal Jamming,Morse Code, Reverse Hacking & Tracking with Pacemaker) எமக்கு திரை போட்டுக்காட்டினாலும் பலரிடம் அது ஒட்டவில்லை, ஏனெனில் பார்வையாளர்களுக்கு பரிச்சயம் குறைந்தவை என்பதாலும் பார்வையாளர்களை கதை தன்னுடன் எடுத்துச் செல்லவில்லை என்றால் சரி போல் உள்ளது.
மொத்தத்தில் 'புரியாத புதிர்' புரிதல்கள் வேண்டி