
Monday, January 16, 2017
MGR's 100th Birthday
It won’t be a contested if one says MGR is the only actor in the world who has more devotees than mere fans. MGR's 100th Birthday (17-Jan).

Thursday, January 12, 2017
மிகப் பெரிய சாதனைகளையும் ஒரு சிறு புன்சிரிப்புடன் தாண்டிச் செல்லும் இசைப்புயல்
1994 ஆம் ஆண்டுகளில் சைக்கிளில் தைனமோ பூட்டி-சுத்தி முக்காலா முக்காப்பிலா மற்றும் ஊர்வசி பாடல்களை திரும்பத் திரும்பத் பலதடவை கேட்டிருப்போம். ஆனால் அப்போது யார் இசை அமைப்பாளர், பாடியவர்கள், கவிஞர், ஒலி-பொறியியலாளர் (Sound Engineer) என்றெல்லாம் சிந்தித்தது கிடையாது. ஆனாலும் அந்த பாடல் மயக்கம் 23 வருடங்கள் கழிந்தும் எம்மை கட்டிப்போட்டுள்ளது
என்றால் மிகையல்ல. அதற்கு நல்ல உதாரணம் சிலவேளைகளில் வீதியில் செல்லும்போது, அப்பாடல்கள் சில கடைகளில் ஒலித்துக்கொண்டிருக்கும். பின்னர் நாம் வீடு வந்த பின்னர் அப்பாடலை மீண்டும் கேட்டிருப்போம். 'ரோஜா' முதல் இறுதியாக வந்த 'அச்சம் என்பது மடைமையடா' வரை எல்லாமே கேக்க கேக்க பிடிக்கும் வகையறாக்கள். இசையை மாத்திரமல்லாது தமிழ் மொழியையும்
உலகிற்கு எடுத்துச் சென்றவர் ரஹ்மான்.
அநேகமான இசை மேதைகளை பார்த்தால் அவர்களிடத்தில் ஆன்மீக சக்தி (Spiritual Power) ஒன்று அவர்களிடத்தில் ஒட்டிக்கொண்டு இருக்கும், உதாரணமாக மெல்லிசை மன்னர் விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா மற்றும் இசைப்புயல் ரஹ்மான். இளையராஜா ஒரு இசை திமிர் பிடித்த மனிதர். சில இடங்களில் தன்னை பெருமை பேசும் விதமாக இசை செய்வார். ஆனால் அவர் அவ்வாறு செய்வதில் தவறு இல்லை. ஏனெனில் அவர் 100 வீதம் தனது சொந்த இசை அறிவையே பயன்படுத்தி இருப்பார் தனது பாடல்களில். அவரது பாடல்கள் எவ்வாறு எமது வாழ்க்கையோடு இன்றியமையாதது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் சொன்னால், "இளையராஜாவின் இசை நிகழ்ச்சிகளில் சில பாடல்கள் ஒலிக்கையில் ரசிகர்களின் கண்ணிலிருந்து கண்ணீர் ஒழுகும்". இதை விட வேறு ஆதாரம் தேவையில்லை எத்தனை இசை
மேதாவிகள் தமிழ் திரைஉலகத்துக்கு வந்தாலும் ராஜா என்றென்றும் ராஜாதான், மாற்றுக் கருத்தில்லை.
பணிவு என்ற சொல்லை நான் அறிவேன் ஆனால் அதை நேரடியாக பார்த்து முதலில் வியர்ந்தது என்னுடன் வேலை செய்த ஒரு மூத்த கணிய அளவியலாளர். அவர் தனது துறையில் ஏறத்தாழ 30 வருடத்திற்கும் அதிக அனுபவம் உடையவர் ஆனாலும் அனைவரையும் மதிப்பது மட்டுமல்லாது தனது அனுபவத்தை விட வயது குறைந்த என்னைப் போன்றவர்களுடனும் எந்தவிதமான சஞ்சலங்களும் (Ego Problem) இன்றி முழு ஈடுபாட்டுடன் வேலை செய்வார். திரை உலகில் உள்ளவர்களில் பணிவின் சிகரம் என்றால் ரஹ்மான்தான் இருக்க முடியும் என்று நம்புகின்றேன். திரை உலகின் உச்ச வெற்றியாக கருதப்படும் ஆஸ்கார் இரண்டை ஒருவாயில் பெற்றாலும் திருவாய் மறந்து கூட தன்னைப் பற்றி பெருமை கூறியது கிடையாது. சாதனைகளின் சொந்தக் காரன் சாதாரண மனிதனாக வாழ்கின்றமை வியப்புக்குரியதே. அநேகர் “அவனை” விழிப்பது ஒரு கலாச்சாரத்துக்கே, ஆனால் ரஹ்மான் போன்ற ஒரு சிலர் தான் சொல்லும் சொல்லுக்கேற்ப "எல்லாப் புகழும் இறைவனுக்கே" என்று வாழ்கின்றனர். தமிழைப் பற்றி தப்பட்டை அடிப்பவர்களுக்கு மத்தியில் ஒரு ஓடும் தூய நதியாக தனது வெற்றியை தமிழில் பதிவு செய்தார் மேலை நாட்டவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் மத்தியில்.
என்னதான் மிகப் பெரிய சாதனைகளையும் ஒரு சிறு புன்சிரிப்புடன் தாண்டிச் செல்லும் இசைப்புயல். அத்துடன் எனக்கு அடிக்கடி தோன்றுகின்ற விடயம் யாதெனில் ரஹ்மான் போன்ற சாதனையாளர்கள் ஒரு பொது நிகழ்வில் கலந்து கொண்டிருக்கின்ற வேளையில் இவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? எதைப் பற்றி சிந்திப்பார்கள்?...
ரஹ்மானுக்கு அடியேனின் 50 ஆவது பிறந்த தின (06 தை) (பிந்திய) வாழ்த்துக்கள்.
இக்கட்டுரையை எழுதி முடிக்கையில் இணையத்தில் கிடைத்த செய்தி ஒன்று, இவர் சோமாலியாவில் 3000 வருடங்கள் பழமை வாய்ந்த சில இசைக்கருவிகளை வாங்கியதாகவும் அவற்றின் விலைகள் மிகக் குறைவாக இருந்தது. காரணம் என்னவென்ற போது அங்கே தலைவிரித்தாடும் வறுமை என்பது அனைவருக்கும் தெரிந்ததே ஆனாலும் ரஹ்மான் மிகப் பெரிய தொகையை அந்நாட்டு அரசே வியக்கும் வகையில் கொடுத்து உதவியுள்ளதாக.
இசைப்புயலின் சில ஞாபகங்கள்















Labels:
இசை,
இளையராஜா,
சினிமா,
தமிழர்,
தமிழ்,
தமிழ்த் திரை,
பணிவு,
பொழுதுபோக்கு,
ரஹ்மான்
Location:
Doha, Qatar
Subscribe to:
Posts (Atom)