உலகின் உயரிய சாதனை செய்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நோபல் பரிசு வழங்கும் திட்டத்தை ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆல்பர்ட் நோபல் என்பவர் 1901ம் ஆண்டு உருவாக்கினார். இதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி பரிசை தொடர்ந்து வழங்க ஏற்பாடு செய்தார்.
இதற்காக குறிப்பிட்ட தொகை வங்கிகளிலும், பல்வேறு துறைகளிலும் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதில் இருந்து வரும் வருமானம் மூலம் பரிசு தொகை வழங்கி வருகின்றனர்.
ஒவ்வொரு நோபல் பரிசுக்கும் ரூ.7 கோடி பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் உலக பொருளாதார மாற்றங்கள் காரணமாக நோபல் அமைப்புக்கு வரவேண்டிய வருமானம் குறைந்துவிட்டது. எனவே இனிவரும் காலங்களில் நோபல் பரிசு தொகையை குறைத்து வழங்க திட்டமிட்டு உள்ளனர்.
இது பற்றி நோபல் அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஷால்மர் கூறும்போது, “எதிர் காலத்தில் பரிசு தொகையை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதை தவிர்க்க முயற்சித்து வருகிறோம். ஆனால் நிலைமை சீராகும் வாய்ப்பு குறைவாக உள்ளது” என்றார்.
No comments:
Post a Comment