Saturday, December 5, 2009

"சே"






அடச்சே என்று வாழ்வில் சொல்பவர்களும்
கூட
இவர் எங்கள் "சே" என்று கொண்டாடுகின்றனர்
உன்னை.

பல தோழர்களைக் கண்டேன்
பெயர்களுக்கு முன்னால் தோழனே
தோழனானதை உன்
பெயரில் மட்டும் தான் கண்டேன்.

ஒரு இரு சக்கர வாகனச்
சுற்றுப் பயணம் இயக்கியது
உன் பிற்கால வாழ்க்கையை.
கண்டாய் அங்கே தொழுநோயாளிகளை
மருத்துவனானாய்
கண்டாய் அங்கே அல்லலுறும் மக்களை
போராளியானாய்.

எங்கோ ஓர் மூலையில் ஒளிந்திருந்த
மனிதம் காக்கும் கனல்
உன் மூளையில் அமர்ந்து ஒளிரத்
தொடங்கியது இந்த பயணத்தில் தான்.


முன்னூறு வைத்து ஏழாயிறம்
கழித்தாய் கணிதத்தில் அல்ல
உன் கொரில்லா போர் சரிதத்தில்.

கற்பனை அவதாரங்களில் இல்லை
என்றும் நம்பிக்கை எனக்கு
உன்னுடைய அவதாரங்களைத் தவிர்த்து
எத்தனை கண்டாய் நீ தோள் கொடுக்கும்
தோழனாய்
நோயை விரட்டும் மருத்துவனாய்
போரிலே களப் போராளியாய்
தொழில் திட்டங்கள் தீட்டும்
தொழிலமைச்சனாய்
பொருளாதார திட்டங்களிடும் நிதி
அமைச்சனாய்
மீண்டும் களப் போராளியாய்
அது ஒரு தொடர் கதை...

மூச்சுக் குழல் நோயும் முட்டிப்
பார்த்து முடியாமல் பின்
மூச்சு வாங்க ஓடியது .

எல்லை என்றுமே உனக்கு தொல்லை
எல்லைகளற்ற ஏகாதிபத்தியமற்ற
கனவு உலகம் தான் உன் இலட்சியம்.

புரட்சி வரலாற்றில் முற்றுப் புள்ளி
அல்ல நீ
என்றுமே புரட்சியை தொடரும்
தொடர் புள்ளி தான் நீ...

நன்றி ப.ல.வெங்கடேசன்


facebook இல் சுட்டது

No comments:

Post a Comment