மொரீசியசு , சிங்கப்பூர், இந்தியா, இலங்கை ஆகிய நான்கு நாடுகளின் நாணயங்களில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
சிறப்பாக மொரீசியசு நாட்டின் நாணயங்களில் தமிழ் எழுத்துகள் மட்டுமல்லாது தமிழ் எண்களும் பொறிக்கப்பட்டுள்ளன.
உலகில் ஒரே ஒரு நாடு மட்டுமே தமிழ் எண்களை நாணயத்தாள்களில் பயன்படுத்துகிறது. அது மொரீசியசு (Mauritius ) மட்டுமே. (தமிழ் எண்கள் ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9) மொரீசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் ( ரூ.100 தமிழில் ௧௦௦) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம். நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ள படம் மொரீசியசு தமிழரான (Renganaden Seeneevassen) ரங்கநாதன் சிறீனிவாசனுடையது.
கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களை எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்
nice story thanks bro
ReplyDelete