Thursday, September 3, 2009

வரலாறு

சரித்திரம் என்பது விளம்பர மனிதரின்
சாகச முத்திரைகள் - கடல்
தெறித்திடும் போதினில் புகைப்பட மாகிடும்
சிற்சில நீரலைகள்!

ஆயிரங் கோடி மனிதரில் ஒருசிலர்
அடைகிற பிரபலங்கள் - பல
ஆயிர மாயிரம் பெயரை மறைத்திடும்
அற்புதப் புதைகுழிகள்!

வையத்து மாந்தர் நடந்துசென் றேகிய
வழிகளின் ஓவியங்கள் - சில
பொய்யையும் தூக்கி
மெய்யென ஆக்கிப்புகன்றிடும் மூலங்கள்

-மு.மேத்தா-

No comments:

Post a Comment