When I Do good , I feel good, When I
do bad, I feel bad, and that is my religion.
-Abraham Lincoln-
பிரச்சனைகளானது நாம் படிக்கும் போது (மு) படிப்பில் போட்டி நிலவுவதால் சில நேரங்களில் அது பிரச்சனை. படிப்பு முடிந்த பின்னர் வேலை தேட வேண்டும்.(ட்) அதுவும் பிரச்சனை, வேலை கிடைத்தால் பிற்பாடு சம்பளப் பிரச்சனை.
நாட்டிலே பார்த்தால் பொருட்களின் விலை உயர்வு, இதிலிருந்து வாழ்க்கைச்செலவு அதிகரிக்க, அதை ஈடு செய்ய பொய், களவு மற்றும் கொலை போன்ற பிரச்சனை(டா) என வளர்ந்து கொண்டே செல்லும்.
திரைப்படம் பார்க்க சென்றால் அங்கே நுழைவுச் சீட்டு வாங்குவதில், இருக்கைக்கு பிரச்சனை. எப்படியோ உ(ள்)ளே நுழைந்தால் படம் நன்றாக இல்லாவிட்டால் 'அட இந்தக் காசுக்கு சாப்பிட்டிருக்கலாம்' என்று நினைத்து பிரச்சனை. சின்னத்திரை நாடகங்(கள்) (தினம்) பார்ப்பதால் பிரச்சனைகள்.
அண்ணியும் சித்தியும் அப்பாவும் அண்ணாமலையும் அக்கினி சாட்சியாக பந்தத்தில் ஆரம்பித்த பயணம் மெட்டிஒலி சத்தம் கூட கேட்காமல் நடக்கின்ற நம் வீட்டு குல விளக்குகளின் கழுத்தின் நாலாவது முடிச்சாக விழுந்து நீ நான் அவள் என்று குடும்பங்கள் எல்லாம் பிரிந்து சொர்க்க வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்ற கனவுகள் எல்லாம் நம்பிக்கை அற்றுப் போய்க்கொண்டு இருக்கிறது. வேலன் வந்தாலும் காப்பாற்ற முடியாது. சூலன் வந்தாலும் காப்பாற்ற முடியாது. அகடவிகடன் வந்தாலும் திருத்தமுடியாது அரட்டைஅரங்கம் வந்தாலும் திருத்தமுடியாது. நான் சொல்வது யாவும் கதை அல்ல நிஜம்.
பலவகையான பிரச்சனைகள் அவற்றை எல்லாம் சமாளிப்பதற்கு பதிலாக (முறையே 31/03/2012,
01/04/2012, 02/04/2012) நாளைய, இன்றைய இல்லாதுவிடின் நேற்றைய தினக்காட்டியை பாருங்கள். அவ்வாறும் உங்களால் அறிய முடியாவிடின்.........
மேலே தமிழில் உள்ள முதல் 3 பந்தியில் அடைப்புக்குறியில் உள்ள சொற்களை கோர்த்து வாசிக்கவும்.
நன்றி.
(உங்கள் கருத்துக்களை கீழே உள்ள கருத்துப் பெட்டியில் உங்கள் கருத்துக்களை ஆழமாக இல்லாவிடினும் மேலோட்டமாக பதிந்து செல்லவும்.)